Advertisement
இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில், கோபல்பூர் மற்றும் பாராதீப்பிற்கு இடையே இன்று இரவு கரையை கடக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று (03.10.2025) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

