தமிழகத்தில் 23 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

0
11
Advertisement


சென்னை,

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருப்பூர், வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, கோவை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × four =