சன் டிவி சீரியலில் நடிக்கும் நடிகர் ஒருவர், தனக்கு மகள் பிறந்துள்ளதாக உணர்ச்சிமயமான வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சரவணன் மீனாட்சி’ தொடரில் அறிமுகமானவர் நடிகர் அஸ்வின் கார்த்திக். அதன்பின் ’அரண்மனைக்கிளி’, ’மனசு’ உள்ளிட்ட விஜய் டிவி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, சன் டிவியில் ஒளிபரப்பான ’வானத்தைப்போல’ சீரியல் இவருக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்தது. இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரம் வில்லனாக இருந்தாலும், பின்னர் ஹீரோவாக மாற்றப்பட்டது. இந்த சீரியல் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, தனது காதலியான காயத்ரியை அஸ்வின் கார்த்திக் திருமணம் செய்துகொண்டார். காயத்ரி ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் காயத்ரி கர்ப்பமான நிலையில் இருந்தது. தற்போது, அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை அஸ்வின் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.