பக்தி சூப்பர் சிங்கரில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்த பெண்.. மன வேதனையில் அழுத தந்தை

0
10
Advertisement


வாய்ப்பு தராமல் என்னை விரட்டினார்கள்..” என பக்தி சூப்பர் சிங்கரில் இஸ்லாமிய பெண் மற்றும் அவரின் தந்தை அழுத காட்சி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.

பக்தி சூப்பர் சிங்கர்

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக செல்லும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இதில் காயத்திரி டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.

அடுத்து, பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 என ஆரம்பமாகும் என எதிர்பார்த்த வேளையில் பக்தி பாடல்கள் அடங்கிய பக்தி சூப்பர் சிங்கர் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

பக்தி சூப்பர் சிங்கரில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்த பெண்.. மன வேதனையில் அழுத தந்தை | Bakthi Super Singer Murugan Bakthi Sat Sun Promo

மன வேதனையில் அழுத தந்தை

இந்த நிலையில், பக்தி பாடல்கள் வாயிலாக தங்களின் திறமைகளை போட்டியாளர்கள் காட்டி வருகிறார்கள். அதில், சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் வின்னரான அருணாவின் தங்கை கலந்து கொண்டுள்ளார்.


அருணா, சூப்பர் சிங்கர் சீசன் 9-ல் பக்தி பாடல்கள் சுற்றில் சிறப்பாக பாடியிருப்பார். அவரை போன்று திறமைக் கொண்ட தங்கைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இதனை தொடர்ந்து இந்த வாரம் முருகன் பக்தி பாடல்கள் சுற்று சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் பாடிய இஸ்லாமிய பெண், ஔவையார் வேடம் அணிந்து முருகனுக்கான பாடலை பாடினார்.

பக்தி சூப்பர் சிங்கரில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்த பெண்.. மன வேதனையில் அழுத தந்தை | Bakthi Super Singer Murugan Bakthi Sat Sun Promo



பாடல் முடிந்தவுடன் அவருடைய தந்தை மேடைக்கு வந்து,“ என்னுடைய கடவுள் எனக்கு கொடுத்த வரம் என்னுடைய மகள்..” என அழுதுள்ளார். அதன் பின்னர் பேசிய பெண், “ எனக்கு வாய்ப்பு தராமல் விரட்டினார்கள்..” என கண்ணீருடன் கூறினார்.


பக்தி சூப்பர் சிங்கர் கொடுத்த வாய்ப்பால் அந்த பெண்ணின் குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது என்பதனை இந்த ப்ரோமோ நாம் காணலாம்.



இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.                 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

           



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 16 =