#JUST IN : குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு : டவுன்லோடு செய்வது எப்படி?

0
12
Advertisement


குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை, www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in ஆகிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது. 

 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவிக்கை எண்கள்: 04/2025 (01.04.2025) மற்றும் 05/2025 (04.2025) வாயிலாக நேரடி நியமனத்திற்கு வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-I பணிகள்) மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-A (தொகுதி-IA பணி) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 15.06.2025 அன்று முற்பகல் நடைபெற்றது.

இதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு (விரிந்துரைக்கும் வகை) 01.12.2025 முதல் 04.12.2025 மற்றும் 08.12.2025 முதல் 10.12.2025 முற்பகல் சென்னை மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் www.tnpscexams.gov.in மற்றும் www.tnpscexams.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 11 =